கன்னட திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் யாஷ், கடைசியாக நடித்த திரைப்படம் கே ஜி எஃப். ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையும் கன்னட சினிமாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திரைப்படம் என்றால் அது கேஜிஎப் தான்.

கே ஜி எஃப் திரைப்படத்தில் நடிகர் யாஷ், ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான கேங்ஸ்டராக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய கே ஜி எஃப் படத்தை ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது கே ஜி எஃப் 2 திரைப்படம் தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான கே ஜி எஃப் சாப்டர் 2 டீசர் இந்திய அளவில் எந்த திரைப்படமும் செய்யாத இமாலய சாதனையை யூட்யூபில் படைத்தது.

இந்நிலையில் நடிகர் யாஷ் வீட்டில் நடைபெற்ற விசேஷத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. நடிகர் யாஷ் கட்டியுள்ள புதிய வீட்டின் புதுமனை புகுவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் யாஷ் அவரது மனைவியோடு இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.