கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பெண்குயின். கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தில் லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ் நடித்துள்ளனர். ஜூன் 19-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாகவும், மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. 

Keerthy Suresh Penguin Kolame Lyric Video

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 53 நாட்களில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டது. போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்து, ரிலீஸுக்கு காத்திருந்த இப்படம் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அனில் க்ரிஷ் எடிட்டிங் செய்துள்ளார். 

Keerthy Suresh Penguin Kolame Lyric Video Keerthy Suresh Penguin Kolame Lyric Video

சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது முதல் சிங்கிளான கோலமே பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. சுஷா பாடிய இந்த பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இந்த லிரிக் வீடியோவை வெளியிட்டார்.