திரையுலகில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருதுகள். வழக்கமாக வருடம் தோறும் பிப்ரவரி மாதம் விருது வழங்கும் விழா நடைபெறும். அதற்கு முந்தைய வருடத்தில் ரிலீசான படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்காக போட்டியிடும். ஆனால் இந்த வருடம் கொரோனா பிரச்சனை காரணமாக உலகம் முழுவதும் சினிமாத்துறை ஸ்தம்பித்துள்ளது. பல படங்கள் ரிலீஸாக முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது ஆஸ்கார் விருது விழாவை இரண்டு மாதங்கள் தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Oscars Postponed By 2 Months To 25th April 2021

2021 பிப்ரவரி மாதம் வரை வெளியாகும் படங்கள் ஆஸ்கார் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். நாமினேஷன் பற்றிய அறிவிப்பு மார்ச் 15, 2021ல் வெளிவரும். அதனைத்தொடர்ந்து ஏப்ரல் 25, 2021ல் விருது விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Oscars Postponed By 2 Months To 25th April 2021

தியேட்டர்களில் குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு தினமும் மூன்று முறை திரையிடப் பட்ட படங்கள் மட்டுமே ஆஸ்கார் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த வருடம் அதுவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் நேரடியாக ஓடிடி எனப்படும் ஸ்டிரீமிங் பிளாட்பார்ம்களில் வெளியான படங்களும் ஆஸ்கார் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆஸ்கார் விருதுகள் விழா தள்ளிவைக்கப்படுவது வரலாற்றில் இது நான்காவது முறை.