அறிமுக இயக்குனர் கலீஸ் இயக்கத்தில் உருவான டெக்னோ திரில்லர் படம் தான் இந்த கீ. ஜீவா நாயகனாக நடித்த இந்த படத்தில் நிக்கி கல்ராணி, RJ பாலாஜி, சுஹாசினி ஆகியோர் நடித்துள்ளனர். ஹேக்கிங் என்னும் விஷயத்தால் நடக்கும் தீமையான விளைவுகளை பற்றி படம் எடுத்துரைக்கிறது. இதுதான் படத்தின் கதைச்சுருக்கம். 

Kee Movie Review By Galatta Featuring Jiiva Nikki Galrani

பப்'பில் ஜீவா, பிரஸ் ரிப்போர்ட்டரான அனைகாவைச் சந்திக்கிறார். ஆனால், திடீரென அனைகா இறந்துபோகிறார். இதற்கிடையில் கல்லூரியில் தன்னுடன் படிக்கும் நிக்கி கல்ராணியை காதலிக்கிறார் ஜீவா. நிக்கி கல்ராணிக்கு கதையில் பெரிதாக இடம் இல்லை என்று தான் கூற வேண்டும்.

Kee Movie Review By Galatta Featuring Jiiva Nikki Galrani

கம்பியூட்டரிலும், மொபைல் போன்களிலும் இருக்கும் தகவல்களை யார் வேண்டுமானாலும் ஹேக் செய்து பயன்படுத்தும் அபாயம் இருப்பதைச் சொல்வதுதான் இயக்குநரின் நோக்கம் எனப் புரிகிறது.

Kee Movie Review By Galatta Featuring Jiiva Nikki Galrani

விடைதெரியாத பல கேள்விகளுக்குள் பார்வையாளர்கள் தடுமாறிக் கொண்டிருக்கும்போது, திடீர் திடீரென பாடல்கள் வேறு பொறுமையைக் கடுமையாக சோதிக்கின்றன. ஆர்.ஜே. பாலாஜியின் காமெடியும் பெரிதளவில் ஒர்க் ஆகவில்லை.

Kee Movie Review By Galatta Featuring Jiiva Nikki Galrani

எமோஷனல் காட்சியில் பேசும் வசனம் சிரிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நடிகை சுஹாசினி போன்ற மூத்த நடிகையை சரியாக பயன் படுத்த வில்லை என்று தான் கூறவேண்டும். சைக்கோபாத்தாக வரும் வில்லனின் நடிப்பு ஓவர்டோஸாக தெரிந்தாலும் இறுதியில் அழுத்தமாக அமையவில்லை.

Kee Movie Review By Galatta Featuring Jiiva Nikki Galrani

இரண்டு வருடங்கள் தாமதமாக வெளியான இந்த படம் ரசிகர்களை பெரிதளவில் ஈர்க்கத்தவறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

கலாட்டா ரேட்டிங் - 1.75/5