கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி பெரிய வெற்றியடைந்த தொடர் திருமணம்.இந்த தொடரில் இரண்டாவது நாயகனாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் தீபக் குமார்.தனது நடிப்பால் இந்த தொடரிலேயே பல ரசிகர்களை பெற்றிருந்தார் தீபக்.

இவர் அடுத்ததாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த என்றென்றும் புன்னகை தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார் அடுத்ததாக ஈரமான ரோஜாவே தொடரில் ஒரு ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவர் பிரபல சீரியல் நடிகையும்,தொகுப்பாளினியுமான அபிநவ்யாவை காதலித்து வந்தார்.பிரபல செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி,சன் டிவியின் பிரியமானவன் மற்றும் விஜய் டிவியின் சிவா மனசுல சக்தி தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் அபிநவ்யா.

இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.இவர்களது திருமணம் கடந்த ஜனவரி மாதம் கோலாகலமாக நடைபெற்றது.அபிநவ்யா கர்பமாக இருக்கும் நற்செய்தியை சில வாரங்களுக்கு முன் பகிர்ந்து கொண்டார்.தற்போது இவரது வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.