தனது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படத்திலேயே குறிப்பிடப்படும் இயக்குனராக முத்திரை பதித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த திரைப்படமான கைதி திரைப்படத்தில் ஓட்டு மொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இதனை அடுத்து தனது மூன்றாவது படத்தில் தளபதி விஜயுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது நான்காவது படத்திலேயே கமல்ஹாசன் அவர்களை இயக்கும் வாய்ப்பை பெற, உருவான விக்ரம் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸானது. விக்ரம் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனைகள் படைத்தது.

இந்த வரிசையில் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகளுக்காக மிகுந்த ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வருகிற டிசம்பர் மாதம் முதல் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் குறித்து பல முன்னணி நடிகர் - நடிகைகளின் பெயர்களும் சமூக வலைதளங்களில் உலா வரும் நிலையில் தற்போது நடிகர் விஷால் தளபதி 67 திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் தளபதி 67 திரைப்படத்திற்காக நடிகர் விஷால் அவர்களை மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

#Vishal | மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற விஷால் - லோகேஷ் கனகராஜ் சந்திப்பு.

விஷால் குழுவினருடன் லோகேஷ். #LokeshKanagaraj | #Vijay67 | #Thalapathy67 pic.twitter.com/fH94PEPmXx

— Senthilraja R (@SenthilraajaR) October 31, 2022