2014-ல் தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் கத்தி.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமந்தா,சதிஷ்,நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Kaththi Hindi Remake Akshay Kumar As Hero

இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் பரவி வருகின்றன.இந்த படத்தை மிஷன் மங்கள் படத்தை இயக்கிய ஜெகன் சக்தி இந்த படத்தை இயக்கவுள்ளார்.

Kaththi Hindi Remake Akshay Kumar As Hero

இந்த படத்திற்கு IKKA என்று பெயரிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அக்ஷய் குமார் ஏற்கனவே விஜயின் துப்பாக்கி படத்தை ரீமேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் காஞ்சனா மற்றும் வீரம் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

Kaththi Hindi Remake Akshay Kumar As Hero