‘வாத்தி’ பட தயாரிப்பாளரின் அடுத்த திரைப்படம் .. பிரபல ஹீரோவுடன் கூட்டணி – இணையத்தில் வைரலாகும் அட்டகாசமான அப்டேட்...

வாத்தி தயாரிப்பாளரின் அடுத்த திரைப்படம் வைரலாகும் அப்டேட் இதோ -  Vaathi producer next fim with this star viral photos here | Galatta

தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வெளியான திரைப்படம் ‘வாத்தி’. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இப்படத்தினை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். சித்தாரா என்டர்டேயின்மென்ட் தயாரிப்பில் உருவான இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து சமுத்ரகனி, சம்யுக்தா, பாரதி ராஜா உள்ளிட்டோர் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருப்பார். ரசிகர்களின் மிகப்பெரிய கொண்டாட்டத்துடன் வெளியாகி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

வசூல் ரீதியாக வெற்றி பெற்ற வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து வாத்தி பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த அட்டகாசமான திரைப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. தெலுங்கு திரைத்துறையில் தற்போது ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஷ்வாக் சென் நடிக்கவிருக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது சித்தாரா என்டர்டேயின்மண்ட்.

VS11 என்றழைக்கப்படும் இந்த படத்தினை பிரபல இயக்குனர் கிருஷ்ணா சைத்தன்யா இயக்கவுள்ளார்.இவர் முன்னதாக ‘ரௌடி பெல்லோ’, சல் மோகன் ரங்கா போன்ற படங்களை இயக்கியுள்ளார். படத்திற்கு அனீத் மதானி ஒளிப்பதிவு செய்ய தேசிய விருது வென்ற நவீன் நூலி படத்தொகுப்பு செய்யவுள்ளார்.  மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

Mass Ka Das @VishwakSenActor ~ #VS11 Begins! 🔥

Shoot commences from Mid of May 2023! ❤️‍🔥

🎶 @thisisysr
✍️& 🎬 #KrishnaChaitanya @vamsi84 #SaiSoujanya @Venkatupputuri @innamuri8888 @SitharaEnts @Fortune4Cinemas #SrikaraStudios pic.twitter.com/wLWnHwAg0b

— Sithara Entertainments (@SitharaEnts) April 26, 2023

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி மற்றும் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான வெளியான புகைப்படங்களை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது ரசிகர்கள் அந்த புகைப்படங்களை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றன்னர்.

சமந்தாவிற்கு கோவில் கட்டிய ரசிகர்.. வெறித்தனமான ரசிகர் கொடுத்த விளக்கம்.. - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

சமந்தாவிற்கு கோவில் கட்டிய ரசிகர்.. வெறித்தனமான ரசிகர் கொடுத்த விளக்கம்.. - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

தளபதி விஜயுடன் நடிகர் விஷால்.. திடீர் சந்திப்பின் காரணம் இது தான்..  வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

தளபதி விஜயுடன் நடிகர் விஷால்.. திடீர் சந்திப்பின் காரணம் இது தான்.. வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

குந்தவையை தேடி போகும் வந்தியத்தேவன்.. ஆபத்தில் உதவிய நம்பி.. – பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ இதோ..
சினிமா

குந்தவையை தேடி போகும் வந்தியத்தேவன்.. ஆபத்தில் உதவிய நம்பி.. – பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ இதோ..