தளபதி விஜயின் யோஹன் - 5 முறை F1ரேஸ் சாம்பியன் அஜித் குமார்... கவனம் ஈர்க்கும் ஜீவி பிரகாஷின் புது பட கலக்கலான டீசர் இதோ!

ஜீவி பிரகாஷின் அடியே பட டீசர் வெளியீடு,gv prakash kumar in adiye movie motion poster out now | Galatta

தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பும் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக திகழும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் இசையில் இந்த 2023 ஆம் ஆண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ருத்ரன் படத்திற்கும் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். தொடர்ந்து இந்த 2023ம் ஆண்டில் தனுஷின் கேப்டன் மில்லர், விஷாலின் மார்க் ஆண்டனி, இயக்குனர் பா.ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாகும் தங்கலான், கார்த்தியின் ஜப்பான், வசந்த பாலனின் அநீதி, அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே ஆகிய திரைப்படங்கள் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் தயாராகி வருகின்றன. மேலும் இயக்குனர் வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்திற்கு இசையமைக்கும் ஜீவி பிரகாஷ் குமார், ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிக்கும் சூரரைப் போற்று ஹிந்து ரீமேக் படத்திற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்தடுத்து இடிமுழக்கம், 13, கள்வன் ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக ஜீவி பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் அடியே. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்தடுத்து இடிமுழக்கம், 13, கள்வன் ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக ஜீவி பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் அடியே. ஏண்டா தலையில எண்ண வைக்கல மற்றும் திட்டம் இரண்டு ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் கார்த்திக் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகும் அடியே திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகை கௌரி கிஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் முக்கிய இடங்களில் நடிக்கின்றனர். 

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த அடியே திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவில், முத்தய்யன் படத்தொகுப்பு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மோஷன் போஸ்டர் இன் தொடக்கத்திலேயே செல்போன் மாதிரியான ஒரு பொருள் காண்பிக்கப்படுகிறது. அதில் பயனாளர் மல்டிவெர்சில் பயணம் செய்ய தயார் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்களை இலங்கை பிரதமர் சீமான் என்றும் , தளபதி விஜய் இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் நடிக்காமல் கைவிடப்பட்ட யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தின் 150 வது நாள் என்றும், ஃபார்முலா ஒன் பந்தயத்தில் ஐந்து முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற அஜித்குமார் என்றும்,  நடிகர் சங்க கட்டிடத்தை விஷால் தலைமையில் ராதாரவி திறந்து வைக்கிறார் என்றும் போஸ்டர் காண்பிக்கப்படுகிறது. மேலும் ஏழு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் போட்டி என குறிப்பிட்டுள்ள ஒரு டிஜிட்டல் ஸ்கிரீனில் தோனி ஆர்சிபி அணிக்கு கேப்டனாக விளையாடுவது போலவும் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக தல கேதார் ஜாதவ் என்றும் சூப்பர் ஸ்டார் மன்சூர் அலிகான் நடிக்கும் பேரரசுவின் 3.0 என்றும் இந்திய பிரதமர் கேப்டன் விஜயகாந்த்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பறக்கும் பேராஷூட்களும் காண்பிக்கப்படுகின்றன. அடுத்தடுத்து அட்ராசிட்டியான விஷயங்களை கோர்த்து வெளிவந்திருக்கும் இந்த அடியே மோஷன் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த மோஷன் போஸ்டர் இதோ…
 

பொன்னியின் செல்வன் - RRR படங்களின் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து தரமான விளக்கமளித்த ஸ்ரீகர் பிரசாத்! வைரல் வீடியோ
சினிமா

பொன்னியின் செல்வன் - RRR படங்களின் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து தரமான விளக்கமளித்த ஸ்ரீகர் பிரசாத்! வைரல் வீடியோ

ரஜினி - விஜய் படங்களுக்கு படத்தொகுப்பு செய்வதில் இருக்கும் சுவாரசியங்களை பகிர்ந்த ஸ்ரீகர் பிரசாத்! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

ரஜினி - விஜய் படங்களுக்கு படத்தொகுப்பு செய்வதில் இருக்கும் சுவாரசியங்களை பகிர்ந்த ஸ்ரீகர் பிரசாத்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

'அவ்வளவு EASY கிடையாது!'- மணிரத்னத்துடன் பணியாற்றுவது குறித்து மனம் திறந்த பொன்னியின் செல்வன் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!
சினிமா

'அவ்வளவு EASY கிடையாது!'- மணிரத்னத்துடன் பணியாற்றுவது குறித்து மனம் திறந்த பொன்னியின் செல்வன் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!