பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ரஜாத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் கார்த்தி 17 என கூறப்படும் தேவ். நடிகர் கார்த்தியின் கிளாஸ் லுக் படத்திற்கு கூடுதல் வலு என்றே கூறலாம். 

இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகர்கள் தேவ் படத்தில் முக்கிய பாத்திரத்தில் உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் டீஸர் வெளியாகி சமூக ஊடங்கங்களில் பெரிதும் பேசப்பட்டது.

படத்தின் முதல் பாடல் டிசம்பர் 14-ம் தேதி வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தில் மொத்தமாக 5 பாடல்கள் என்ற செய்தி வெளியாகியது. ஆடியோ juke box மொத்தம் 25நிமிடம் என கூறப்படுகிறது.

தற்போது தேவ் படத்தின் கர்நாடக விநியோக உரிமையை studio horizon நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிறுவனம் தான் தல அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தையும் வாங்கியுள்ளது என்பது கூடுதல் தகவலாகும்.