விஷால் தற்போது வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் அயோக்யா படத்தில் நடித்து வருகிறார்.இது தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான டெம்பர் படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.

ராஷி கண்ணா இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.பார்த்திபன்,கே.எஸ்.ரவிக்குமார்,சோனியா அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படம் மே 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் முதல் பாடலான கண்ணே கண்ணே வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார்.இது சாம்.சி.எஸ் இசையில் இவர் பாடும் மூன்றாவது பாடலாகும்.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்