தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.இந்த படம் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் அயலான்,சிபி இயக்கத்தில் டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இந்த படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.இவற்றை தவிர சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் தயாராகும் SK 20 படத்தில் நடிக்கவுள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதனை தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தினை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.இந்த படத்தின் அறிவிப்பு நேற்று பிக்பாஸ் பைனலில் வெளியிடப்பட்டது.

கமல் தயாரிப்பில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி இன்னும் கடுமையாக உழைப்போம் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.அடுத்து பேசிய கமல் இது இந்திய சினிமாவில் பேசப்படும் படமாக ரிலீசுக்கு பின் இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.கமல் போன்ற ஒரு பெரிய நடிகர் இப்படி ஒரு படத்தினை பாராட்டியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்றியுள்ளது.