கடந்த 106 நாட்களாக விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது. ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளரான ராஜூ ஜெயமோகன் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். ரன்னர் அப்-ஆக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அறிவிக்கப்பட்டது பிக்பாஸ் அல்டிமேட். பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் இதனை அறிவித்தார். இதுவரை தினசரி இரவு ஒரு மணிநேரமும் சனி & ஞாயிறு நாட்களில் ஒன்றரை மணி நேரமும் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது வெளிவரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24/7 ஒளிபரப்பாக உள்ளது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் தமிழ் அல்டிமேட் நிகழ்ச்சியை நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டுமே காண முடியும்.

வருகிற ஜனவரி 30 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 70 நாட்கள் நடைபெறும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுவரை நடைபெற்ற 5 பிக் பாஸ் தமிழ் சீசன்களிலிருந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக களமிறங்க உள்ளனர். குறிப்பாக வனிதா விஜயகுமார், ஜூலி, அனிதா சம்பத், ஷாரிக், சுரேஷ் சக்கரவர்த்தி, ஓவியா, சினேகன், பாலாஜி ராமதாஸ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் போட்டியாளர்களாக களம் இறங்கலாம் என சமூக வலைதளங்களில் சில பெயர்கள் உலா வருகின்றன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது பிக் பாஸ் தமிழ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முன்னோட்டமாக உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் அதற்கான வீட்டைம் அறிமுகப் படுத்தும் விதமாக அசத்தலான புதிய ப்ரோமோ வெளியானது ட்ரெண்டாகும் அந்த ப்ரோமோ இதோ…