டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்க அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.

REPUBLIC DAY

குடியரசு தின விழா ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி அணிவகுப்பு நடத்தப்படும். இதில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறும்.

இதில் சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் போராட்டங்கள் குறித்த சிறப்புகளை கூறும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இந்த அலங்கார ஊர்திக்காக 36 மாநிலங்கள் மாடல்களை அனுப்பியிருந்தன.  

தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழாவில் இடம் பெறுவதற்காக அலங்கார ஊர்தி மாடல் அனுப்பப்பட்டது. அதில், சுதந்திர போராட்டத் தியாகிகளான கப்பலோட்டிய தமிழகர் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் தேசிய அளவில் மிகவும் பிரபலமானவர்கள் இல்லை என கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

12 மாநிலங்களின் மாடல்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழாவில் இடம் பெறுவதற்காக அலங்கார ஊர்தி மாடல் அனுப்பப்பட்டது. அதில் சுதந்திர போராட்டத் தியாகிகளான வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியார் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. 

இந்த நிலையில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான வீரர்களை எதிர்பார்ப்பதாக கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. அது போல் இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு யாரென்றே தெரியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தெரிகிறது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4 ஆவது சுற்று வரை சென்ற நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

4வது சுற்று வரை சென்ற நிலையில் தமிழக அரசின் அலங்கார வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியாரை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும் மத்திய அரசு கூறி நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் தென்னிந்தியாவில் தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா அரசின் அலங்கார ஊர்திக்கு மட்டும் மத்திய அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதனைத்தொடர்ந்து இதேபோல் மேற்கு வங்காளத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி மேற்கு வங்கத்தின் சார்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்தி ஒன்றும் சிறப்பாக தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால், அதிருப்தி அடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ளதாவது: இந்த முடிவால் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மத்திய அரசின் இந்த அணுகுமுறையால் மேற்கு வங்க மக்கள் அனைவரும் மிகவும் வேதனையடைந்துள்ளனர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வங்கம் முன்னணியில் இருந்தது மற்றும் பிரிவினையின் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்காக மிகப்பெரிய விலையை செலுத்தியுள்ளது.

நேதாஜி மற்றும் நாட்டின் சுதந்திரத்துக்கு அர்ப்பணித்த சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் மேற்கு வங்க அரசின் அலங்கார ஊர்திக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்றும் சொல்லப்படவில்லை.. அதனால், மத்திய அரசு இதுகுறித்து மறுபரிசீலனை செய்து குடியரசு தினவிழாவில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல, கேரள மாநிலத்தின், ஸ்ரீ நாராயண குருவின் அலங்கார ஊர்திக்கும் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. ஸ்ரீ நாராயண குரு என்பவர்தான், ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்ற தத்துவத்தை வலியுறுத்தியவர். இவரின் அலங்கார ஊர்தியும் திடீரென நிராகரிக்கப்பட்டுவிட்டது.. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எனவே கேரளாவை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.