“மிகவும் வேதனை அளிக்கிறது..” மறைந்த மனோபாலா குறித்து ரஜினிகாந்த் உருக்கமான பதிவு – வைரலாகும் பதிவு இதோ..

மனோபாலா மறைவிற்கு ரஜினிகாந்த் உருக்கமான பதிவு வைரல் பதிவு இதோ – Rajinikanth about manobala here is the tweet | Galatta

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான மனோபாலா அவர்கள் உடல்நல குறைவினால் அவரது 69 வயதில் காலமானார். இது தொடர்பாக ரசிகர்கள் திரைத்துறையினர் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகிறார். தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக ரஜினிகாந்த், விஜயகாந்த், மோகன், கார்த்தி போன்ற பல முக்கிய கதாநாயகர்களை இயக்கி ஒரு இயக்குனராகவும் பல நூற்றுக்கணக்கான வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் திரையுலகில் ஒரு நடிகராகவும் தமிழ் சினிமாவே வியந்து பார்த்த திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் என்று பன்முக திறமை கொண்ட மனோ பாலாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

இந்நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மனோபாலாவின் மறைவு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில்,

பிரபல இயக்குரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரஜினிகாந்த் அவரது பதிவு மிகப்பெரிய அளவில் வைரலாவதுடன் ரசிகர்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.@manobalam

— Rajinikanth (@rajinikanth) May 3, 2023

ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் மிக முக்கியமாக அமைந்த திரைப்படம் ‘ஊர்காவலன்’. கடந்த 1987 ல் வெளியான இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் மனோபாலா. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா, பாண்டியன் மற்றும் ரகுவரன் ஆகியோர் நடித்திருப்பார்கள். நேர்த்தியான கதையும் ரஜினிகாந்த் அவருக்கே  உரிய ஸ்டைலான சண்டையும் நிறைந்த திரைப்படத்தில் எமொஷங்களுடன் மனோபாலாவின் நகைச்சுவை 'டச்' அமைந்திருக்கும். இன்றும் ஊர்காவலன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி பார்க்கும் திரைப்படமாக அமைந்துள்ளது. முன்னதாக ரஜினிகாந்த் குறித்து மனோபாலா பல மேடைகளில் பேசியுள்ளார். இருவருக்குமான நட்புறவினை ரசிகர்கள் பல இடங்களில் வரவேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“அடிபோலி.. “ தளபதி விஜயின் லியோ படம் குறித்து மேத்திவ் தாமஸ் பகிர்ந்த தகவல்..  விவரம் உள்ளே..
சினிமா

“அடிபோலி.. “ தளபதி விஜயின் லியோ படம் குறித்து மேத்திவ் தாமஸ் பகிர்ந்த தகவல்.. விவரம் உள்ளே..

சூர்யா 42 ‘கங்குவா’ டீசர் எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த அட்டகாசமான அப்டேட் – Exclusive interview இதோ..
சினிமா

சூர்யா 42 ‘கங்குவா’ டீசர் எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த அட்டகாசமான அப்டேட் – Exclusive interview இதோ..

பொன்னியின் செல்வன் 2 வை தொடர்ந்து சியான் விக்ரம் ரசிகர்களுக்கு கிடைத்த வேற லெவல் அப்டேட்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

பொன்னியின் செல்வன் 2 வை தொடர்ந்து சியான் விக்ரம் ரசிகர்களுக்கு கிடைத்த வேற லெவல் அப்டேட்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..