பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பிரபல நடிகர் மனோபாலா மறைந்தார் - Actor Manobala passed away | Galatta

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான மனோபாலா அவர்கள் உடல்நல குறைவினால் காலமானார். தமிழ் சினிமாவில் 70 களில் தொடங்கி இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குண சித்திர கதாபாத்திரத்திலும் நகைச்சுவை கதாபத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மனோபாலா.. அட்டகாசமான உடல் மொழியில் அவரின் நடிப்பே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் டிரெட் மார்க். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ரஜினிகாந்த், விஜய காந்த், கார்த்திக், மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் ஒரு காலத்தில் வலம் வந்தவர். மேலும் தயாரிப்பாளராக சதுரங்க வேட்டை போன்ற பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களையும் தயாரித்தவர் மனோ பாலா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது சதுரங்க வேட்டை 2 படத்தினை தயாரித்து வருகிறார். மேலும் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார், சமீபத்தில் இவர் நடிப்பில் வால்டர் வீரய்யா, கொன்றால் பாவம், கோஷ்டி ஆகிய படங்கள் வெளியானது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய அளவு பிரபலமடைந்த இவர் சமீப காலமாக உடல்நல குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் தனது 69 வயதில் இயற்கை எய்தியுள்ளார். இதையடுத்து இவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றது. திரைப்படங்களில் பல்துறையில் சிறந்து விளங்கிய இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு.

 

Manobala Sir passed away😪😪😪

— G.M. Kumar (@gmkhighness) May 3, 2023

சூர்யா 42 ‘கங்குவா’ டீசர் எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த அட்டகாசமான அப்டேட் – Exclusive interview இதோ..
சினிமா

சூர்யா 42 ‘கங்குவா’ டீசர் எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த அட்டகாசமான அப்டேட் – Exclusive interview இதோ..

பொன்னியின் செல்வன் 2 வை தொடர்ந்து சியான் விக்ரம் ரசிகர்களுக்கு கிடைத்த வேற லெவல் அப்டேட்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

பொன்னியின் செல்வன் 2 வை தொடர்ந்து சியான் விக்ரம் ரசிகர்களுக்கு கிடைத்த வேற லெவல் அப்டேட்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..

சினிமா

"வந்தியதேவன் குதிரை சத்தம் இப்படிதான் உருவானது.." பொன்னியின் செல்வன் படம் குறித்து ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி பகிர்ந்த தகவல் - Exclusive Interview இதோ..