'தலைவர்' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் - 'ரசிகர்' சிவகார்த்திகேயனின் மாவீரன் ஒரே சமயத்தில் ரிலீஸ்! விவரம் இதோ

ரஜினிகாந்தின் ஜெயிலர் - சிவகார்த்திகேயனின் மாவீரன் ஒரே சமயத்தில் ரிலீஸ்,rajinikanth in jailer and sivakarthikeyan in maaveeran release clash | Galatta

இந்திய சினிமா கொண்டாடும் உச்ச நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படமும் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ஒரே சமயத்தில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதனை அடுத்து தனது திரைப்பயணத்தில் 170-வது திரைப்படமாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் #தலைவர்170 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய TJ.ஞானவேல் தலைவர்170 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதனிடையே இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கிசரஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்க அனிருத் இசை அமைத்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகாரத்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரவுள்ள திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் பிரம்மாண்டமான VFX காட்சிகளோடு அட்டகாசமான சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாக உள்ளது. அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் SK21 படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். முன்னதாக மண்டேலா படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க சரிதா மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படமும் ஒரே சமயத்தில் அடுத்தடுத்த நாட்களில் ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் ரிலீஸாக இருப்பதாக வெளிவந்துள்ள இந்த அறிவிப்புகள் தற்போது கோலிவுட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளன. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படம் என்பதாலேயே ரிலீஸ் சமயத்தில் ஜெயிலர் திரைப்படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் கிடைக்கும். இதனால் சிவகார்த்திகேயனுக்கு தற்போது இருக்கும் பெரிய ஓபனிங் மாவீரன் திரைப்படத்திற்கு கிடைப்பது சந்தேகம் தான். எனவே மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி அமைக்க படக்குழுவினர் திட்டமிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அறிவிப்புகள் வெளியாகுமா என காத்திருந்து பார்க்கலாம்.
 

சினிமா

"தலைவர் வரார்!"- அதிரடியாக வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! செம்ம மாஸ் வீடியோ இதோ

சினிமா

"தளபதி விஜய் - த்ரிஷாவிற்கு லியோ படத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா!"- ரசிகர்களை உற்சாகப்படுத்த சர்ப்ரைஸாக வந்த SPECIAL GLIMPSE இதோ!

கோலிவுட் ராணி
சினிமா

கோலிவுட் ராணி "குந்தவை" திரிஷாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்- பொன்னியின் செல்வனை அடுத்து அதிரடியான 6 படைப்புகள்!