தளபதி விஜயின் லியோ பட ட்ரெய்லரில் இருந்து சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கிய படக்குழு! விவரம் உள்ளே

விஜயின் லியோ பட ட்ரெய்லரில் இருந்து சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்,after controversies bad word is muted from thalapathy vijay in leo trailer | Galatta

முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமான லியோ திரைப்படத்தின் ட்ரெய்லரில் இருந்து சர்ச்சைக்குரிய வசனத்தை படக்குழுவின் நீக்கி இருக்கின்றனர். நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொண்டே இருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் இன்னும் ஒரு வாரத்தில் ரசிகர்களுக்கு ஆக்சன் ட்ரீட்டாக வெளி வருகிறது. மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 2வது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு முதல் அறிவிப்பு வருவதற்கு முன்பிருந்தே எதிர்பார்ப்புகள் கிளம்பின. கடைசியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட்டாக 500 கோடி ரூபாய் வரை வசூலித்த பிளாக்பஸ்டர் வெற்றி, கைதி & விக்ரம் படங்களை கொண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருக்கும் LCU யூனிவர்ஸ், 100% லோகேஷ் படம் உள்ளிட்ட பல காரணங்கள் லியோ திரைப்படத்திற்கு ஆரம்பத்திலேயே ஹைப்பை ஏற்றியது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி மாதம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக காஷ்மீரில் 50 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்த நிலையில், இறுதி கட்டப் பணிகளும் முழு வேகத்தில் நடந்து முடிந்தன. கிட்டத்தட்ட ரிலீசுக்கு 15 நாட்களுக்கு முன்பே லியோ திரைப்படம் சென்சாரையும் நிறைவு செய்துவிட்டது. தற்போது இசையமைப்பாளர் அனிருத் லியோ திரைப்படத்திற்கான இறுதி கட்ட மிக்சிங் பணிகளை செய்து கொண்டிருக்கிறார். அடுத்த ஓரிரு தினங்களில் இந்த பணிகளும் நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகமெங்கும் லியோ திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடப் பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக அட்டகாசமான ப்ரோமோஷன் பணிகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த அக்டோபர் 5ஆம் தேதி வெளிவந்த லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் கட்டாயமாக லியோ படம் மிரட்டலான ஆக்சன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது. 

இந்த நிலையில் தற்போது லியோ திரைப்படத்தின் ட்ரெய்லரில் இடம் பெற்ற ஒரு குறிப்பிடப்படும் சர்ச்சைக்குரிய வசனத்தை படக்குழு தற்போது நீக்கி இருக்கிறது. ட்ரெய்லரின் ஓரிடத்தில் கண்கலங்கியபடி மிகவும் எமோஷனல் ஆகவும் கோபமாகவும் தளபதி விஜய் ஒரு கெட்ட வார்த்தை பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. ட்ரெய்லர் வெளிவந்த சமயத்தில் இருந்தே இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த வசனம் படத்தில் சென்சார் செய்யப்பட்டு நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தளபதி விஜய் போன்ற நட்சத்திர நாயகர்கள் இது மாதிரியான வசனங்களை பேசுவது சரி இல்லை என்பது போல அந்த வசனத்திற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் தற்போது லியோ படத்தின் ட்ரெய்லரில் அந்த குறிப்பிட்ட வசனம் நீக்கப்பட்டு அந்த இடத்தில் MUTE செய்யப்பட்டு இருக்கிறது. சர்ச்சைக்குரிய வசனத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பி நிலையில் அதனை கருத்தில் கொண்டு பட குழு இந்த முடிவை எடுத்திருக்கிறது. அந்த வசனம் MUTE செய்யப்பட்ட லியோ ட்ரெய்லர் இதோ…