இன்டர்நெட் உலகின் முதல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், 27 ஆண்டுகால வரலாற்றை தற்போது முடிவுக்கு கொண்டு வருகிறது.
 
இந்த உலகத்தில் கம்ப்யூட்டர் முதன் முதலாக கண்டுப்பிடிக்கப்பட்ட போது, அதனைப் பார்த்து ஆச்சரியப்பட்டாத மனிதர்களே இல்லை. அதன் தொடர்ச்சியாக இந்த கம்ப்யூட்டரை இந்த இணைய உலகில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், அந்த தீவிர முயற்சியின் பயனாக பிரெளசர் பயன்பாடும் தொடங்கப்பட்டது.

அதாவது, கம்ப்யூட்டரின் தொடக்க காலங்களில் பிரெளசர் என்றால், இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் மட்டுமே இருந்தது. 

அதன்படி, கம்ப்யூட்டர் உலகில் இந்த பிரெளசர் கடந்த 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ம் தேதி கொண்டு வரப்பட்டு இருக்கிறது. 

ஆனால், நாளுக்கு நாள் கம்ப்யூட்டரின் அசுர வளர்ச்சியால் பயர்பாக்ஸ், மைக்ரோசாப்ட் எட்ஜ், கூகுள் குரோம் உள்ளிட்ட மிகவும் ஸ்டாங்கான போட்டியாளர்கள் இந்த இன்டர்நெட் உலகில் கால் பதித்தனர்.

இதன் காரணமாக, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது பெரும்பாலன வாடிக்கையாளர்களை இழந்து, முற்றிலும் பயன்பாட்டில் இல்லாத அளவில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே மிக குறைவான எண்ணிக்கையிலேயே அதனது பயனாளர்கள் இருந்தனர்.

முக்கியமாக, உலகில் உள்ள எல்லா வங்கிகளின் பண பரிவர்த்தனைகளும் கம்ப்யூட்டர் மயமான போது, முதன் முதலாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலமாகவே, கொண்டுவரப்பட்டது. 

ஆனால், தற்போதைய சூழலில் பயர்பாக்ஸ், கூகுள் குரோம் எல்லாம் வந்த பிறகு,  இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துவர்களின் நிலைமையே, அப்படியே தலை கீழாக மாறிப் போய் இருக்கிறது.

அதாவது, புதிய போட்டியாளர்களான குரோம், மொசில்லா பயர்பாக்ஸ் ஆகியவை வந்ததும் இவர்கள் யாருடனும் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பிரெளசரால் போட்டி போட முடியவில்லை என்பதால், தற்போது இந்த சேவையை நிறுத்தும் முடிவை மைக்ரோசாப்ட் நிறுவனம் கையில் எடுத்து உள்ளது. 

இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது முக்கிய மென்பொருளான “இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பிரெளசரை, வரும் 15 ஆம் தேதியான நாளை மறுநாள் முதல் முடிவுக்கு கொண்டு வருவதாக” அறிவித்து உள்ளது. 

இதன் மூலமாக, இணைய உலகில் கிட்டதட்ட 27 ஆண்டுகால இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வரலாறு, இன்னும் 2 நாட்களில் முடிவுக்கு வருகிறது.

அதே நேரத்தில், “மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசரில் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் உள்கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டு உள்ளதால், அதன் பயனாளர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் அடிப்படை பயன்பாடுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றும், மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம், இண்டர்நெட் எக்ஸ்பிளோர் பிரவுசரை அப்டேட் செய்யவில்லை என்பதும், இதனது பயன்பாடு குறைவதற்கு மிக முக்கியமாக காரணமாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.