OTT தளங்களின் வருகைக்கு பின்னர் திரை உலகில் எண்ணற்ற மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இந்தியாவிலும் தற்போது OTT தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் புது புதிதாக பல OTT தளங்களின் வருகையும் தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே இருப்பது வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் உலக அளவில் மிகப் பிரபலமான OTT தளமாக திகழ்கிறது நெட்ஃபிளிக்ஸ். பெரும்பாலான ரசிகர்களின் முன்னணி OTT தளமாக திகழும் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள் மற்றும் டாக்குமென்ட்ரிகள் மீது ரசிகர்களுக்கு தனி ஆர்வம் எப்போதும் உண்டு.

குறிப்பாக நெட்ஃபிலிக்ஸில் வெளியாகியுள்ள MONEY HEIST, BREAKING BAD, WALKING DEAD, PEAKY BLINDERS உள்ளிட்ட வெப் சீரிஸ்கள் இந்திய ரசிகளின் மோஸ்ட் ஃபேவரட் என சொல்லலாம். இந்த வரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த SQUID GAME வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மிரட்டலான SQUID GAME வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளதாக நெட்ஃபிலிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே தொடர்ந்து SQUID GAME வெப்சீரிஸின் பார்ட் 2 ரிலீஸ் தேதி உட்பட இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.