'KH233 அறிவிப்பின் முன்னோட்டமா?'- முதல்முறை வெளிவந்த கமல்ஹாசன் - H.வினோத் இணைந்திருக்கும் புகைப்படங்கள்! விவரம் இதோ

முதல்முறை வெளிவந்த கமல்ஹாசன் - H.வினோத் இணைந்த புகைப்படங்கள்,Kamal haasan h vinoth with members of traditional rice conservation centre | Galatta

ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் வியந்து பார்க்கும் மகா கலைஞரான உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தனது திரைப் பயணத்தில் 234வது படமாக தயாராகும் KH234 திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் உடன் இணைகிறார் உலக நாயகன் கமல்ஹாசன். முன்னதாக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக காலம் கடந்து நிற்கும் நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்னம் உலகநாயகன் கமல்ஹாசன் இணையும் KH234 படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் ராக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் KH234 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கமல்ஹாசனின் திரைப் பயணத்தின் 233 வது திரைப்படமாக உருவாகும் KH233 திரைப்படத்தை இயக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதில் முதலாவதாக மலையாளத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மாலிக் திரைப்படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கமல்ஹாசன் அவர்களே முன்பு தெரிவித்து இருந்தார். இத்திரைப்படத்திற்கு திரைக்கதையும் அவரே எழுதுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அந்த திரைக்கதை எழுதும் பணியையும் கமல்ஹாசன் தொடங்கியிருந்தார். அதேபோல் இயக்குனர் பா.ரஞ்சித் விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது விருமாண்டி திரைப்படத்தின் பாணியில் மதுரையை கதைக்களமாக வைத்து ஒரு சம்பவம் செய்ய வேண்டும் என்று கூற அதே மேடையில் கூடிய விரைவில் நடக்கும் என உலகநாயகனும் உறுதியளித்தார். இதற்கிடையில் இயக்குனர் வெற்றிமாறன், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் அதற்கான அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளி வந்தன.

இதனிடையே சமீபகாலமாக இயக்குனர் H.வினோத் முதல்முறையாக உலக நாயகன் கமல்ஹாசனுடன் KH233 திரைப்படத்தில் இணைகிறார் என்ற தகவல்களும் வெளிவந்தன. இந்த நிலையில் தான் தற்போது உலகநாயகன் கமல் ஹாசனும் இயக்குனர் H.வினோத்தும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் முதல்முறையாக சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன. நெல் ஜெயராமன் அவர்களின் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தை சார்ந்த உறுப்பினர்களை உலக நாயகன் கமல்ஹாசனும், இயக்குனர் H.வினோத்தும் இன்று ஜூன் 12ஆம் தேதி சந்தித்து பேசி இருக்கின்றனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளிவந்து வைரலாகி வருகின்றன. முதல் முறையாக வெளிவந்திருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் - H.வினோத் இணைந்திருக்கும் புகைப்படங்கள் KH233 படத்தை உறுதிப்படுத்துகின்றன என்றும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என்றும் தற்போது செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம். கமல்ஹாசன் - H.வினோத் இணைந்து பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய உறுப்பினர்களை சந்தித்த புகைப்படங்கள் இதோ...
 

Dynamic duo🔥@ikamalhaasan #Ulaganayagan #KamalHaasan #HVinoth #Kamal #Indian2 #Vinoth #Galatta pic.twitter.com/yhhQTXvJWP

— Galatta Media (@galattadotcom) June 12, 2023

Ulaganayagan Kamal Haasan and Director H. Vinoth met the committee members of the Nel Jayaraman Traditional Rice Conservation Centre.@ikamalhaasan #KamalHaasan #Kamal #Indian2 #HVinoth #KH234 #Galatta pic.twitter.com/IUdhlJp0JB

— Galatta Media (@galattadotcom) June 12, 2023

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 51வது படம்... மலேசியாவில் நடைபெறும் படப்பிடிப்பு குறித்த ஸ்பெஷல் அப்டேட் இதோ!
சினிமா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 51வது படம்... மலேசியாவில் நடைபெறும் படப்பிடிப்பு குறித்த ஸ்பெஷல் அப்டேட் இதோ!

இசையமைப்பாளராக களமிறங்கும் ARரஹ்மானின் மகள் கதீஜா... முதல் படமே வேற லெவல்! இயக்குனர் யார் தெரியுமா? அட்டகாசமான அறிவிப்பு இதோ
சினிமா

இசையமைப்பாளராக களமிறங்கும் ARரஹ்மானின் மகள் கதீஜா... முதல் படமே வேற லெவல்! இயக்குனர் யார் தெரியுமா? அட்டகாசமான அறிவிப்பு இதோ

சூப்பர் ஹீரோவாக அசத்தும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன்... அதிரடி சண்டைகாட்சியின் ACTION PACKED மேக்கிங் வீடியோ இதோ!
சினிமா

சூப்பர் ஹீரோவாக அசத்தும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன்... அதிரடி சண்டைகாட்சியின் ACTION PACKED மேக்கிங் வீடியோ இதோ!