காஜல் அகர்வால்-யோகி பாபுவின் ஹாரர் காமெடி சரவெடி கோஸ்டி … கவனம் ஈர்க்கும் கலகலப்பான ட்ரெய்லர் இதோ!

காஜல் அகர்வாலின் கோஸ்டி பட ட்ரெய்லர் வெளியீடு,kajal aggarwal in ghosty movie trailer out now | Galatta

ஹிந்தியில் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த க்யூன் ஹோ கயா னா படத்தில் நடிகையாக அறிமுகமான நடிகை காஜல் அகர்வால் பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் லக்ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கினார். தொடர்ந்து தெலுங்கில் நட்சத்திர நாயகர்களோடு இணைந்து நடித்து முன்னணி கதாநாயகிகள் ஒருவரான நடிகை காஜல் அகர்வால், தமிழில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சரோஜா திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து மோதி விளையாடு படத்தில் கதாநாயகியாக நடித்த காஜல் அகர்வால் கார்த்தியின் நான் மகான் அல்ல திரைப்படத்திற்கு பிறகு பிரபல கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்தார். தொடர்ந்து இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக அசத்தி வரும் நடிகை காஜல் அகர்வால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார். 

தற்போது மீண்டும் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கி இருக்கும் நடிகை காஜல் அகர்வால் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டில் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்குனராக களமிறங்கிய ஹே சினாமிக்கா திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையிலான படமாக ஹே சீனாமிக்கா திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறார். சில தடைகளுக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் பட்சத்தில் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

இதனிடையே பாலிவுட்டில் காஜல் அகர்வால் நடித்துள்ள உமா திரைப்படம் விரைவில் ரிலீசாக தயாராகி வருகிறது. மேலும் தமிழில் ஹாரர் திரில்லர் திரைப்படமாக நடிகை காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, தயாராகி வரும் கருங்காப்பியம் திரைப்படமும் வெகு விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் அடுத்ததாக காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவர தயாராகியுள்ள திரைப்படம் கோஷ்டி. முன்னதாக நடிகர் பிரபுதேவாவின் குலேபகாவலி மற்றும் ஜோதிகாவின் ஜாக்பாட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் கோஸ்டி திரைப்படத்தில் காஜல் அகர்வாலுடன் இணைந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, ஊர்வசி, ஆடுகளம் நரேன், சத்தியன், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, சந்தான பாரதி, லிவின்ஸ்டன், மதன் பாபு, மனோபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, முக்கியமான கௌரவ தோற்றத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். SEED PICTURES நிறுவனம் தயாரிப்பில் ஹாரர் காமெடி படமாக தயாராகியிருக்கும் கோஸ்டி திரைப்படத்திற்கு ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவில் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். கோஸ்டி திரைப்படம் வருகிற மார்ச் 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோஸ்டி திரைப்படத்தின் கலகலப்பான ட்ரெய்லர் தற்போது வெளியானது. அந்த ட்ரெய்லர் இதோ…

 

உடல் நலக்குறைவால் வாடும் பிதாமகன் பட தயாரிப்பாளருக்கு உதவிக்கரம் நீட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! விவரம் உள்ளே
சினிமா

உடல் நலக்குறைவால் வாடும் பிதாமகன் பட தயாரிப்பாளருக்கு உதவிக்கரம் நீட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! விவரம் உள்ளே

சினிமா

"கதை சொல்ல ஆரம்பிக்கும் போதே OK சொன்னேன்!"- லோகேஷ் கனகராஜ் உடன் முதல் சந்திப்பு குறித்து மனம் திறந்த சார்லி! வீடியோ உள்ளே

சினிமா

"இளைய நிலா பொழிகிறதே" பாடலின் கிட்டாரிஸ்ட்டாக மனம் கவர்ந்த பிரபல இசை கலைஞர் திடீரென காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்