அடுத்தடுத்து தன் படங்களால் கவனத்தை ஈர்த்து தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூல் சாதனைகள் படைத்தது. இதனை அடுத்து மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி67 படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணி இணைகிறது. 

தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் வரும் டிசம்பர் மாதம் முதல் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த கைதி திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

அஜய் தேவ்கன் பிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், T சீரிஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து போலா திரைப்படத்தை தயாரிக்கின்றன. முன்னணி பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கும் கைதி ரீமேக்கான போலா திரைப்படத்தில் அஜய் தேவ்கன் கார்த்தியின் டில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நரேனின் பிஜாய் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். 

மேலும் நடிகை அமலாபால் முக்கியமான வேடத்தில் போலா திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு (2023) மார்ச் 30ஆம் தேதி போலா திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் போலா திரைப்படத்தின் அதிரடியான டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அட்டகாசமான அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.