ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தை இயக்குனர் ராஜேஷ்.எம்.செல்வா இயக்கி வருகிறார். 

கடந்த 2015-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த தூங்காவனம் என்ற படத்தை இயக்கியவர் தற்போது நடிகர் விக்ரமுடன் இணைந்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரமுடன் அக்ஷரா ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை மலேசியாவில் முடித்துவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். மேலும் கோலாலும்பூரில் குழந்தைகளுடன் இருப்பது போன்ற புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.