லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சயீஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, பூர்ணா, போமன் இரானி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். 

Kaappaan Siriki Song Making Galatta Exclusive Kaappaan Siriki Song Making Galatta Exclusive Kaappaan Siriki Song Making Galatta Exclusive

சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட டீஸர் அனைவரையும் ஈர்த்தது. படத்தின் வில்லன் சிராக் ஜானி G எனும் குஜராத்தி படத்தில் நாயகனாக நடிக்கும்போது அடிபட்டதாகவும் பின்பு அதிலிருந்து மீண்டு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. தெலுங்கில் பந்தோபஸ்த் எனும் டைட்டில் கிடைத்தது நாம் அறிந்தவையே.

Kaappaan Siriki Song Making Galatta Exclusive Kaappaan Siriki Song Making Galatta Exclusive Kaappaan Siriki Song Making Galatta Exclusive

காப்பான் படத்தின் இசை வெளியிட்ட விழா சமீபத்தில் திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமசந்திர ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர், வைரமுத்து மற்றும் பல பிரபலங்கள் சூர்யா பற்றியும் காப்பான் படம் பற்றியும் பேசி அசத்தினர்.

Kaappaan Siriki Song Making Galatta Exclusive

தற்போது கலாட்டா குழுவிற்கு சிறப்பு பேட்டியளித்த நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ், பாடல் வாய்ப்பு கிடைத்தது குறித்தும், பாடல் உருவான விதம் குறித்தும் பகிர்ந்துள்ளார். எதார்த்தமாக கிராமத்து வாசனையுடன் பேசி பழகும் செந்தில் கணேஷ் என்னென்ன பேசியுள்ளார் என்பதை கீழ் உள்ள வீடியோவில் கண்டு மகிழுங்கள்.