லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சயீஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, பூர்ணா, போமன் இரானி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். 

Kaapaan Movie New Update Suriya Mohan Lal Arya Sayeesha

சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட டீஸர் அனைவரையும் ஈர்த்து வருகிறது. படத்தின் வில்லன் சிராக் ஜானி G எனும் குஜராத்தி படத்தில் நாயகனாக நடிக்கும்போது அடிபட்டதாகவும் பின்பு அதிலிருந்து மீண்டு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. தெலுங்கில் பந்தோபஸ்த் எனும் டைட்டில் கிடைத்தது நாம் அறிந்தவையே.

Kaapaan Movie New Update Suriya Mohan Lal Arya Sayeesha

தற்போது வெளியான செய்தி என்னவென்றால், காப்பான் படத்தின் படப்பிடிப்பு 99% முடிவடைந்தாம். சூர்யா நடிக்கவிருக்கும் காட்சிகள் மட்டுமே மீதியுள்ளதாக தகவல் தெரியவந்தது. ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சூரரைப் போற்று படத்தை தவிர்த்து, இயக்குனர் சிவா இயக்கவிருக்கும் படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார்.