கலகலப்பு படத்தை அடுத்து ஜீவா அடுத்ததாக நடித்துள்ள படம் கீ.நிக்கி கல்ராணி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.RJ பாலாஜி,சுஹாசினி,மனோபாலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.

விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.பல காரணங்களால் தாமதமான இந்த படம் மே 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நாளை படம் வெளியாகவுள்ள நிலையில் விஷால் சந்திரசேகர் இசையில் இந்த படத்தின் மெலடி பாடலான காதோரம் என்ற பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலின் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்