தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் கதைகளையும் தேர்தெடுத்து நடிப்பவர் கார்த்தி.கடைக்குட்டி சிங்கம் போன்ற பக்கா கிராமத்து கதையிலும்,தேவ் போன்ற பக்கா மாடர்ன் கதையிலும் அசால்டாக தனது முத்திரையை பதித்திருப்பார்.இவர் அடுத்ததாக மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். 

Jyothika and Karthi Unite For a Film First Time To be Directed by Papanasam Fame Jeethu Joseph

இதற்கு பிறகு ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் பாபநாசம் பட இயக்குனர் ஜீது ஜோசப் உள்ளிட்டோர் படங்களில் நடிக்க உள்ளார்.இதில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார்.

Jyothika and Karthi Unite For a Film First Time To be Directed by Papanasam Fame Jeethu Joseph

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ஜீது ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தில் ஜோதிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.கார்த்தியுடன் ஜோதிகா இணைவது இதுவே முதன் முறையாகும்.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jyothika and Karthi Unite For a Film First Time To be Directed by Papanasam Fame Jeethu Joseph