தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜீவா நடிப்பில் தமிழில் இந்த ஆண்டு கடைசியாக வெளிவந்த திரைப்படம் களத்தில் சந்திப்போம். இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக 1983ம் ஆண்டு உலகக்கோப்பை நிகழ்வை மையப்படுத்தி உருவான 83 திரைப்படத்தில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஜீவா.

முன்னதாக ஜீவா மற்றும் சிவா இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை படமான கோல்மால் மற்றும் கலகலப்பு-2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்சி ஜீவா ஜெய் கூட்டணியில் உருவாகியுள்ள காஃபி வித் காதல் ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக ஜீவா நடித்து வரும் திரைப்படம் வரலாறு முக்கியம். இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் ரொமான்டிக் காமெடி திரைப்படமான வரலாறு முக்கியம் திரைப்படத்தில் காஷ்மிரா பரதேசி மற்றும் பிரக்யா நக்ரா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில் R.B.சௌத்ரி தயாரிக்கும் வரலாறு முக்கியம் படத்துக்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வரலாறு முக்கியம் திரைப்படத்தின் முதல் பாடலாக “பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகல” எனும் பாடல் தற்போது வெளியானது. கலக்கலான அந்த பாடல் இதோ…