தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து வெரைட்டியான திரைப்படங்களில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் அடுத்த சாதனை முயற்சியாக தயாராகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் (Non Linear Single Shot Movie)  திரைப்படமாக இரவின் நிழல் திரைப்படம் உருவாகியுள்ளது.

பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரித்துள்ள இரவு நிழல் திரைப்படம் முன்னதாக கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இரவின் நிழல் திரைப்படம் திரையிடபட்டது. இரவு நிழல் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வெளியிட வருகிற ஜூன் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து இரவின் நிழல் திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ப்ரிகிடா, ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இரவின் நிழல் படத்திலிருந்து காயம் பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியானது. காயம் பாடல் லிரிக்கல் வீடியோ இதோ…