ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜெயம் ரவியின் இறைவன் பட அட்டகாசமான அறிவிப்பு… புத்தம் புதிய ப்ரீ டீசர் இதோ!

ஜெயம் ரவியின் இறைவன் பட ப்ரீ டீசர் வெளியீடு,jayam ravi in iraivan movie pre teaser out now | Galatta

இயக்குனர் அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் இறைவன் திரைப்படத்தின் அட்டகாசமான அறிவிப்பு ப்ரீ டீசர் வெளியானது. அனைத்து வயது ரசிகர்களும் குடும்பத்தோடு கொண்டாடும் வகையில்  தரமான கதைக்களங்களையும் நல்ல நல்ல கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் வரிசையாக வெளிவந்து மக்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. முன்னதாக அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். இந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் சைரன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் & ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தின் 30வது திரைப்படமாக உருவாகும் JR30 படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக 100 கோடி ரூபாய் செலவில் தனது 32 வது உருவாகும் ஜீனி படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் . சமீபத்தில் ஜீனி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே வாமனன், என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் I.அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் இறைவன். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இறைவன் திரைப்படத்தில் ராகுல் போஸ் ஆஷிஷ் வித்யார்த்தி நரைன் சார்லி வினோத் கிட்சன் விஜயலட்சுமி அழகம் பெருமாள் பக்ஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஹரி.K.வேதாந்த் ஒளிப்பதிவில், மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்ய, இறைவன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரிக்கும் இறைவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கும் இறைவன் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இறைவன் திரைப்படத்தின் டிரைலர் வருகிற செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் இறைவன் திரைப்படத்தின் ப்ரீ டீசர் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த ப்ரீ டீசர் வீடியோவை கீழே உள்ள லிங்கை காணலாம்.