டாடா வெற்றியை தொடர்ந்து கவின் நடிக்கும் ஸ்டார்... யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் பரிசாக வந்த முதல் ஸ்பெஷல் ப்ரோமோ இதோ!

கவின் நடிக்கும் ஸ்டார் பட முதல் சிறப்பு முன்னோட்டம் வெளியீடு,actor kavin next movie star official promo out now | Galatta

விஜய் தொலைக்காட்சியின் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீசன் 2 சீரியலில் நடிகராக களமிறங்கி பின்னர் சரவணன் மீனாட்சி மெகா தொடரில் வேட்டையன் எனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே மிகப் பிரபலமடைந்தவர் நடிகர் கவின். சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் களமிறங்கிய கவின் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த சத்ரியன் திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்தார். தொடர்ந்து மீண்டும் சின்னத்திரையில், விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட கவின் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் தோல்வியடைந்தாலும் தமிழ்நாடு முழுவதும் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். இதனை அடுத்து தமிழ் சினிமாவில் முதல் முறை கதாநாயகனாக கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த நட்புனா என்னனு தெரியுமா படத்தில் நடித்த நடிகர் கவின் கடந்த 2021 ஆம் ஆண்டு ஹாரர் திரில்லர் திரைப்படமாக நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற லிஃப்ட் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்தார். 

அதைத் தொடர்ந்து முதல் முறை வெப் சீரீஸில் களமிறங்கிய கவின், கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளிவந்த ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த வரிசையில் கடைசியாக கவின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் டாடா. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான பக்கா ஃபீல் குட் திரைப்படமாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற டாடா திரைப்படத்திற்கு பிறகு தமிழ் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கும் ஒரு புதிய ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்து வரும் கவின் தொடர்ந்து இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ஊர்க்குருவி எனும் புதிய படத்திலும் நடிக்கிறார். இதனிடையே கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நடிகர்கள் கவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தனது நீண்டநாள் காதலியான மோனிகாவை கவின் திருமணம் செய்து கொண்டார்

இதற்கிடையே கவின் அடுத்து நடிக்கும் ஸ்டார் திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. முன்னதாக பியார் பிரேமா காதல், ஓமணப் பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் ஸ்டார் படத்தில் நடிப்பதாக கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் திரைப்படம் தாமதமான நிலையில் தற்போது அந்த ஸ்டார் திரைப்படத்தில் கவின் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கும் இந்த ஸ்டார் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ஸ்டார் திரைப்படத்திற்கு எழில் அரசு.K ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் .E. ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்களின் பிறந்த நாள் பரிசாக கவின் நடிக்கும் ஸ்டார் திரைப்படத்தின் முதல் சிறப்பு முன்னோட்டம் வெளிவந்துள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்த புதிய ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.