ரசிகர்கள் எந்த திரைப்படம் பார்க்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கும்போது அவர்களுக்கு உதவியாக இருக்கும் தளம் IMDB.உலகளவில் உள்ள பல மொழி திரைப்படங்களில் சிறந்தவை எவை என்று மக்கள் இந்த தளத்தின் மூலமாக முக்கிய தெரிந்து கொள்ளுவார்கள்.

IMDB-யில் அதிக மதிப்பெண்கள் பெரும் படங்கள் பெரும் பெருமைக்குரியவகையாக ரசிகர்கள் மத்தியில் கருதப்படும்.இந்த IMDB ரேட்டிங்கில் பல தமிழ் படங்கள் அதிக ரேட்டிங் பெற்று பெருமை படைத்துள்ளன.சமீபத்தில் வெளியான பல படங்களும் அதிக ரேட்டிங்குகள் பெற்றிருந்தன.

பிரபல திரைப்பட மதிப்பீடு தளமான இந்த IMDB வருட வருடம் பிரபலமான தொடர்கள் படங்கள் உள்ளிட்டவை குறித்த லிஸ்டை வெளியிடுவார்கள்.இந்த வருடம் இதுவரை வெளியான படங்களை வைத்து இந்த வருடத்திற்கான டாப் 10 படங்களின் வரிசையை வெளியிட்டுள்ளனர்.

இந்த லிஸ்டில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.நான்காவது இடத்தில் விஜயின் மாஸ்டர் மற்றும் ஏழாவது இடத்தில் தனுஷின் கர்ணன் என மூன்று தமிழ் படங்கள் உள்ளன.முக்கிய ரேட்டிங் தளமான IMDBயின் டாப் 10-ல் மூன்று தமிழ் படங்கள் உள்ளதை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.