இசையமைப்பாளராக இருந்து அடுத்து ஹீரோ தயாரிப்பாளர் என அவதாரங்கள் எடுத்து அதில் வெற்றிகண்டு அசத்தி வருபவர் விஜய் ஆண்டனி.இசையமைப்பாளராக பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்ற இவர் நடிகராகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

இவர் ஹீரோவாக நடித்த நான்,சலீம்,பிச்சைக்காரன் என பல திரைப்படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.அடுத்ததாக காக்கி,ரத்தம்,தமிழரசன்,அக்னி சிறகுகள்,கொலை,மழை பிடிக்காத மனிதன்,பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.பிச்சைக்காரன் 2 படத்தினை விஜய் ஆண்டனி இயக்கி இயக்குனராகவும் அவதாரம் எடுக்கிறார்.

இவர் நடித்துள்ள ரத்தம் படத்தினை தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்குகியுள்ளார்.இந்த படத்தினை இன்ஃபினிட்டி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளது என படக்குழுவினர் சில புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.