கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாக உள்ள படம் ஜகமே தந்திரம். ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் போன்றோர் நடித்துள்ளார்கள். தனுஷின் 40ஆவது படமான, ஜகமே தந்திரம் கடந்த வருடமே வெளிவந்திருக்க வேண்டிய படம். ஆனால், கொரானோ தொற்று காரணமாக வெளிவராமல் தள்ளிப் போய்விட்டது. 

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கும் முன்பே தயாராகிவிட்டது. கொரோனா ஊரடங்கினால் தள்ளி வைக்கப்பட்டது. 

ஜகமே தந்திரம் திரைப்படத்தின் டீஸர் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பரோட்டா மாஸ்டராக வரும் தனுஷ், லண்டன் கேங்ஸ்டர்களுடன் இணைந்து செய்யும் செய்கையே இந்த ஜகமே தந்திரம்.  

ஜகமே தந்திரம் வெளியீடு தொடர்பாக சமீபத்தில் தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட ரசிகர்கள் மற்றும் பெரும்பாலான எனது ரசிகர்களைப் போல நானும் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தனுஷ் தெரிவித்திருந்தார். 

லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தனுஷ் கிடா மீசையில் சுருளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.