விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் தனிமைப்படுத்துதலில் இருப்பதால் அவருக்கு பதிலாக நடிகை ரம்யாகிருஷ்ணன் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

கடந்த வாரத்திற்கு முன் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய, கடந்த வாரத்தில் நடன இயக்குனர் அமீர் மற்றும் நடிகர் சஞ்சீவ் ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக இணைந்தனர். தொடர்ந்து கடந்த வாரத்தில் கனா காணும் காலங்கள் லக்சரி பட்ஜெட் டாஸ்க் பரபரப்பாக நடந்து முடிந்தது.

முன்னதாக நிரூப், தாமரைச்செல்வி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, பாவ்னி, பிரியங்கா ஆகியோர் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கி பெர்ரி விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியிலிருந்து Evict செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய நிகழ்ச்சியில் ஐக்கி பெர்ரி Eliminate செய்யப்பட்டது ஒளிபரப்பாகும்.இதுவரை வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த மூவரும் ஆண்கள் என்பதால் புதிதாக பெண் போட்டியாளர்  வைல்ட் கார்டில் நுழையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.