விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்கள் மலர் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்று நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.பல மொழிகளில் ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன் விஜய் டிவி தமிழில் அறிமுகம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது.

முதல் மூன்று சீசன்களில் பங்கேற்ற பலரும் டிவி நிகழ்ச்சிகள்,படங்கள்,சீரியல் என்று ஏதேனும் ஒன்றில் செம பிஸியாக நடித்து வருகின்றனர்.இவர்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து கொரோனா வர நான்காவது சீசன் பிக்பாஸ் தள்ளிப்போனது.ஒருவழியாக சில மாதங்களுக்கு பிறகு பிக்பாஸ் சீசன் 4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் தொடரின் ஐந்தாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பிரியங்கா,இமான்,சிபி,பவானி ரெட்டி,வருண்,நிரூப்,தாமரை செல்வி,அபிஷேக் ராஜா என 18 போட்டியாளர்களுடன் இந்த போட்டி தொடங்கியது,சில எலிமினேஷன்கள் கடந்து விறுவிறுப்பான கட்டத்தில் நகர்ந்து வருகிறது.

50 நாட்கள் கடந்து இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக வாரக்கடைசியில் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகின்றனர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார் என்ற தகவல்களும் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இதனை உறுதி செய்யும்படி விஜய் டிவி தற்போது ரம்யா கிருஷ்ணன் வரும் ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.ரம்யாகிருஷ்ணன் எப்படி தொகுத்து வழங்கப்போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.