நடிகர், காமெடியன், பாடகர், இசையமைப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்து தமிழ் சினிமா ரசிகர்களை குஷிபடுத்துபவர் இசை சுனாமி பிரேம்ஜி. 

ப்ளூப்பர் புகழ் இயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்திற்கு இவர் தான் இசையமைக்கிறார். இவர் இசையில் வெளியான பார்ட்டி படத்தின் பாடல்கள் இளைஞர்களை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பேட்ட படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வீடியோ பதிவை பகிர்ந்துகொண்டார். சூப்பர் ஸ்டாரின் எண்ணற்ற ரசிகர்களில் இவரும் ஒருவர் என்பதை நிரூபிக்கும் வகையில் இப்பதிவு அமைந்திருக்கிறது.