நெருப்பு டா பாடலின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் அருண்ராஜா காமராஜ். திரை துறையில் நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்தவர் தற்போது இயக்குனராக களமிறங்கிய படம் கனா.     

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் கனா, மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.     

கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண் கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் இது.   

தற்போது இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. இந்நிலையில் பாலிவுட்டின் கிங்கான் என போற்றப்படும் ஷாருக்கான் நடித்த சக் தே இந்தியா படம் ஹாக்கி விளையாட்டை மைய்யமாக கொண்டது. அதே பாணியில் கனா படத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராக வருவாரா என்ற கேள்வியில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.