சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படத்தை தொடர்ந்து, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை உருவாக்கவிருக்கிறார். 

Indian 2 Movie Recent Update Stating That Kajal Agarwal To Play As Heroine In Shankars Direction

கமல் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருக்கிறது. முந்தைய பாகத்தை போலவே கமல் இதில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் சினிமா வட்டாரங்களில் கசிந்து வருகின்றன.   

படத்திற்காக தனது உடல் எடையை குறைக்கும் வேலையில் இறங்கி உள்ளார். இதில் கமலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் நயன்தாரா சில நிபந்தனைகள் விதித்ததாக செய்திகள் வெளியாகின.   

Indian 2 Movie Recent Update Stating That Kajal Agarwal To Play As Heroine In Shankars Direction

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வரும் நயன்தாரா படத்தில் தனக்கு போதிய முக்கியத்துவம் இருக்காது என்று எண்ணி மறுத்துவிட்டார் என்கிறார்கள் நெருங்கிய திரை விரும்பிகள்.   

Indian 2 Movie Recent Update Stating That Kajal Agarwal To Play As Heroine In Shankars Direction

தற்போது வெளிவந்திருக்கும் செய்தி என்னவென்றால் இந்தியன் 2 படத்தில் நடிக்க காஜல் அகர்வாலுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். தென்னிந்திய மொழியின் முன்னணி நடிகர்களில் ரஜினி, கமல் தவிர மற்ற டாப் ஹீரோக்களான விஜய் மற்றும் அஜித்துடன் காஜல் நடித்துவிட்டார்.