கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்த தொடர் இதயத்தை திருடாதே.இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த தொடரின் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நவீன்.ஹிமா பிந்து இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.இந்த தொடரில் தனது நடிப்பால் அசத்திய நவீன் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.இவர் அடுத்ததாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவுள்ள கண்ட நாள் முதல் சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார்.

அதே போல சன் நியூஸ் தொலைக்காட்சியில் பிரபலமான செய்தி வாசிப்பாளராக இருந்து வருபவர் கண்மணி சேகர்.செய்தி வாசிப்பாளராக மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும் அசத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.

நவீன் செய்தி வாசிப்பாளர் கண்மணியை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்தன.அதனை உறுதி செய்யும் விதமாக இருவரும் சில புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.

தற்போது இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.புதுமண தம்பதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.