தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Huge Set Work Going on in College Near Poonamalle For Thalapathy Vijay Starrer Thalapathy 63

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Huge Set Work Going on in College Near Poonamalle For Thalapathy Vijay Starrer Thalapathy 63

தற்போது இந்த படத்திற்காக பிரம்மாண்டமாக பூந்தமல்லியில் உள்ள கல்லூரியில் கால்பந்து மைதான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் கேலரிகளோடு பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த செட்டில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

Huge Set Work Going on in College Near Poonamalle For Thalapathy Vijay Starrer Thalapathy 63

இந்த செட்டை அமைத்து முடிப்பதற்கு ஒரு மாதம் ஆகும் என்று தெரிகிறது.ஏப்ரல் இறுதியில் இருந்து இந்த செட்டில் ஷூட்டிங் நடைபெறும் என்று தெரிகிறது.இந்த படத்தின் firstlook விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Huge Set Work Going on in College Near Poonamalle For Thalapathy Vijay Starrer Thalapathy 63