சமந்தாவின் யசோதா படத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலம் !
By Aravind Selvam | Galatta | March 21, 2022 13:22 PM IST
தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.தனது நடிப்பாலும் அழகாலும் பல ரசிகர்களை பெற்றிருந்தார் சமந்தா.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துவிட்டு சமந்தா அடுத்ததாக தனி ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து அசத்தினார்.
இவற்றை தவிர பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் சமந்தா.அடுத்ததாக சகுந்தலம் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல்,Dream Warrior Pictures தயாரிப்பில் ஒரு படம் என பிஸியாக உள்ளார் சமந்தா.
இவற்றை தவிர முதன்முறையாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் தோன்றவுள்ளார் சமந்தா.இவர் ஒரு ஆங்கில படத்தில் நடிப்பதை சமீபத்தில் அறிவித்துள்ளார்.Arrangement of Love என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது.
யசோதா படத்தினை ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்துள்ளனர்.இந்த படம் தமிழ்,தெலுங்கு,கன்னடா,மலையாளம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது.மணிசர்மா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் Yannick Ben இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
Our exciting Action Thriller #Yashoda is getting bigger! Crucial action sequences by @YannickBen2 underway!
— Sridevi Movies (@SrideviMovieOff) March 19, 2022
A @krishnasivalenk production💥@Samanthaprabhu2 @hareeshnarayan @dirharishankar @varusarath5 @Iamunnimukundan @mynnasukumar @SrideviMovieOff @PulagamOfficial pic.twitter.com/LX4YThfyUt