ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்தின் காட்சிகளுடன் வெளியான சிறப்பு பாடல் – ஆண்ட்ரியா குரலில் அட்டகாசமான பாடல் இதோ..

ஃபர்ஹானா படத்தின் புதிய பாடல் வெளியானது அட்டகாசமான பாடல் இதோ - Farhana movie Title song out now | Galatta

நடிப்பு திறமையை எதார்த்தமாக வெளிப்படுத்தி தேர்ந்த கதைகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கச்சிதமாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து  முன்னணி நடிகையாக வலம் வருகிறார். திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் பெண்கள் மையப்படுத்திய கதையையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்னாதாக இவர் நடிப்பில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வரிசையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றது.  

அதன்படி இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் உடன் இணைந்து நடித்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் இறுதி கட்ட வேலையில் உள்ளது. விரைவில் அப்படம் திரையரங்குகளில் வெளியாகும். பின் தொடர்ந்து மோகன் தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்திலும் இவர் நடிப்பில் சில படங்கள் உருவாகி வருகிறது.

இதனிடையே தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவனிக்க வைத்த திரைப்படங்களான ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஃபர்ஹானா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் இஸ்லாமிய பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் மிக முக்கியமான வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். இபபடத்திற்கு ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் செய்ய  VJ சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவு பேசப்பட்டது. மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்ற ஃபர்ஹானா முன்னோட்டம் அதே நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் சில செய்திகள் எழுந்தது. தடைகளை தாண்டி ஃபர்ஹானா திரைப்படம் வரும் மே மாதம் 12 ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதனிடையே ஃபர்ஹானா படத்தின் டைட்டில் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இப்பாடலுக்கு பாடலாசிரியர் உமா தேவி வரிகள் எழுதியுள்ளார். பிரபல பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா இப்பாடலை பாடியுள்ளார். துள்ளலான இசையில் உருவான இப்பாடலுடன் ஃபர்ஹானா படத்தின் காட்சிகளும் சேர்க்கப்பட்டு லிரிக்கல் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்த பாடல் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

சினிமா

"எனக்கு இரண்டு முகம் இருக்கு..” வெற்றி மாறன் பகிர்ந்த அட்டகாசமான தகவல் - Exclusive Interview இதோ..

அடிதூள்.. கோடிகளை குவிக்கும் பொன்னியின் செல்வன் 2... மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் – விவரம் உள்ளே..
சினிமா

அடிதூள்.. கோடிகளை குவிக்கும் பொன்னியின் செல்வன் 2... மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் – விவரம் உள்ளே..

“ரிலீஸ் தேதி சொன்னதுக்கு அப்பறம் கூட Shoot பண்ணிட்டு இருந்தோம்” வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு நேர்காணல் இதோ..
சினிமா

“ரிலீஸ் தேதி சொன்னதுக்கு அப்பறம் கூட Shoot பண்ணிட்டு இருந்தோம்” வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு நேர்காணல் இதோ..