சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட ரிலீஸ் தேதியை Super Cool போஸ்டருடன் அறிவித்த படக்குழு – ரசிகர்களால் வைரலாகும் அப்டேட் இதோ..

அயலான் படம் வெளியாகும் தேதியை வெளியிட்ட படக்குழு விவரம் இதோ - Ayalaan Movie Release Date update here | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் முக்கியவராக இருந்து இளைஞர்களின் மனதை கவர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது மண்டேலா பட இயக்குனரின் அடுத்த படைப்பான ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அப்படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் – ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் புதிய படத்திற்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு முன்னதே படமாக்கப்பட்டு VFX பணி வேலை நடந்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘அயலான்’. ஏலியன் மையப்படுத்தி SCI FI திரைப்படமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் R ரவிக்குமார் இயக்கியுள்ளார். 24AM ஸ்டுடியோ தயாரிப்பில் KJR ஸ்டுடியோ வழங்கும் இப்படத்திற்கு ஒலிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். முன்னதாக ‘வேற லெவல்’ என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் படத்தில் ரகுல் பரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், இஷா கொப்பிகர், ஷரத் கேல்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

படத்தின் முதல் பார்வை மற்றும் அப்டேட்டிலிருந்து படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்க நீண்ட நாட்களாக படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் படக்குழு நேற்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டது.

அதில்  அயலான் படத்தின் தரத்திற்காக CGI காட்சிகளில் மும்முரமாக இறங்கியுள்ளதாகவும் படம் முழுக்க ஏலியன் வருவதால் அதற்கான கூடுதல் CGI காட்சி பணி நடைபெற்று வருவதாகவும் இந்திய சினிமாவிலே முதல் முழு நீள லைவ் ஆக்ஷன் திரைப்படமாகவும் 4500 க்கும் மேற்பட்ட VFX காட்சிகளை படம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் படம் குறித்த புதிய அப்டேட்டினை இன்று காலை 11.04 வெளியிடுவதாகவும் தகவல் வெளியிட்டது.

We've made contact with extraterrestrial life! And we have a visitor from Outer space 👽 Expected time of Arrival: Diwali 2023🎉🎇

Get ready to welcome our lovely and adorable #Ayalaan 💖#AyalaanFromDiwali2023@Siva_Kartikeyan @arrahman @Ravikumar_Dir @24amstudiospic.twitter.com/3vW6aIYSgJ

— KJR Studios (@kjr_studios) April 24, 2023

அதன்படி இன்று படக்குழு அயலான் படத்தின் சூப்பர் கூல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. எளியனுடன் சிவ்கார்த்திகேயன் பறக்கும் போஸ்டருடன் அயலான் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகை நாளையொட்டி உலகமெங்கும் வெளியாகும் என்று அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அந்த போஸ்டர் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ட்விட்டருக்கு Bye Bye.. இசையமைப்பாளர் ஜிப்ரானின் அதிரடி முடிவு.. காரணம் இதுதான் – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

ட்விட்டருக்கு Bye Bye.. இசையமைப்பாளர் ஜிப்ரானின் அதிரடி முடிவு.. காரணம் இதுதான் – வைரலாகும் பதிவு இதோ..

 “Skin Dress லாம் பயன்படுத்தல..” யாத்திசை படக்குழுவினர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்.. – சிறப்பு நேர்காணல் இதோ..
சினிமா

“Skin Dress லாம் பயன்படுத்தல..” யாத்திசை படக்குழுவினர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்.. – சிறப்பு நேர்காணல் இதோ..

“CM கிட்ட Once More கேட்டேன்.. ரஜினி சார் Surprise Call”.. விக்னேஷ் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்.. – முழு நேர்காணல் இதோ..
சினிமா

“CM கிட்ட Once More கேட்டேன்.. ரஜினி சார் Surprise Call”.. விக்னேஷ் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்.. – முழு நேர்காணல் இதோ..