பியார் பிரேமா காதல் படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் . விஜய் சேதுபதி நடித்த புரியதா புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இந்த படத்தை இயக்குகிறார். காளி படத்தில் விஜய் ஆன்டனியோடு ஜோடி போட்ட ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணோடு நடிக்கிறார் .

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.ஜீரோ படத்தை தயாரித்த மாதவ் மீடியா என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது.

இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி இளைஞர்கள் ஆவலோடு இருக்கும் நேரத்தில் , படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது .பியார் பிரேமா காதல் படத்தை போல மற்றுமொரு நியூ ஏஜ் காதல் கதையை படக்குழுவினர் தருவார்களா என்பதை பொருத்த்திருந்து தான் பார்க்க வேண்டும்.