பியார் பிரேமா காதல் படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் . விஜய் சேதுபதி நடித்த புரியதா புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இந்த படத்தை இயக்குகிறார். காளி படத்தில் விஜய் ஆன்டனியோடு ஜோடி போட்ட ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணோடு நடிக்கிறார் .

Harish Kalyan Ispade Rajavum Idhaya Raaniyum Movie Censored and Ready For Release

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.ஜீரோ படத்தை தயாரித்த மாதவ் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது.இந்த படம் மார்ச் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கபட்டிருந்தது.

Harish Kalyan Ispade Rajavum Idhaya Raaniyum Movie Censored and Ready For Release

இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி இளைஞர்கள் ஆவலோடு இருக்கும் நேரத்தில் ,படத்தின் சென்சார் வேலைகள் முடிந்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.எனவே படம் திட்டமிட்டபடி மார்ச் 15 அன்று வெளியாகும் என தெரிகிறது.

Harish Kalyan Ispade Rajavum Idhaya Raaniyum Movie Censored and Ready For Release

படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.பியார் பிரேமா காதல் படத்தை போல மற்றுமொரு நியூ ஏஜ் காதல் கதையை படக்குழுவினர் தருவார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.