குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தபின், தனுஷ் நடித்த மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, பிரியாணி, வாலு என பல வெற்றி படங்களில் நடித்தார். க்யூட்டான நடிப்பால் உலகளவில் ரசிகர்களை பெற்றார். 

Hansika Denies Rumours About Getting Married

நடிகை ஹன்சிகா தற்போது மஹா எனும் படத்தில் நடித்துள்ளார். இது ஹன்சிகாவின் 50வது படமாகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் STR முக்கிய ரோலில் நடிக்கிறார். வாலு படத்திற்கு பிறகு STR மற்றும் ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Hansika Denies Rumours About Getting Married

கொரோனா ஊரடங்கில் பல வதந்திகள் நம் செவிகளை எட்டி வருகிறது. இந்நிலையில் நடிகை ஹன்சிகாவிற்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் என்று ட்விட்டரில் செய்தி ஒன்று காட்டுத்தீ போல் பரவியது. அதற்கு அவர் யார் ? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப, எனக்கே இப்போ தான் தெரியும் என்று பதிலளித்துள்ளார். இதன் மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை ஹன்சிகா.