தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ்.கைநிறைய பல படங்களை வைத்துள்ளார்.இந்த வருடத்தில் தன்னுடைய முதல் ரிலீசான சர்வம் தாள மயம் அவருக்கு நல்ல பெயரையும் தொடக்கத்தையும் பெற்று தந்தது.

இவரது குப்பத்து ராஜா படம் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.இந்த படத்தை பாபா பாஸ்கர் இயக்குகிறார்.பார்த்திபன்,யோகி பாபு,பூனம் பாஜ்வா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்தபடத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.தற்போது இந்த ட்ரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்