தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ்.கைநிறைய பல படங்களை வைத்துள்ளார்.இந்த வருடத்தில் தன்னுடைய முதல் ரிலீசான சர்வம் தாள மயம் அவருக்கு நல்ல பெயரையும் தொடக்கத்தையும் பெற்று தந்தது.

GV Prakash Kumar Gets Another Interesting Rajinikanth Title For His New Film

இதனை அடுத்து குப்பத்து ராஜா,வாட்ச்மேன் ஆகிய படங்கள் வெளிவந்தன.இதனை தொடர்ந்து இவரது சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.அடுத்ததாக இயக்குனர் எழில் இயக்கம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

GV Prakash Kumar Gets Another Interesting Rajinikanth Title For His New Film

ஈஷா ரெப்பா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சதிஷ்,ஆடுகளம் நரேன்,வையாபுரி,மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஆயிரம் ஜென்மங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது.இதனை படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் வெளியிட்டுள்ளார்.குப்பத்து ராஜா படத்தை தொடர்ந்து மீண்டும் ஜீ.வி ரஜினி பட டைட்டிலில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.